ADVERTISEMENT

’10 ஏழைக்கு உதவி செய்ய நினைத்தோம்’- 3 கோடி கேட்டு மாணவனை கடத்திய மாணவர்கள் வாக்குமூலம்

11:08 PM Aug 31, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி நகர் வேளாளர் தெருவை சேர்ந்தவர் கென்னடி. இரும்பு கேட் உருவாக்கி விற்பனை இன்ஜினியரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் கோகுல். கே.வி.குப்பம் அருகிலுள்ள தனியார் ஐ.டி.ஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

ADVERTISEMENT


ஆகஸ்ட் 30ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு அவனது அம்மா தொடர்பு கொண்டபோது, அது சுச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இரவாகியும் வராமல் இருந்துள்ளான்.


இரவு 9 மணியளவில் அந்த பையனின் செல்போனில் இருந்து அவரது அம்மாவின் செல்போன் எண்ணுக்கு கால் வந்துள்ளது. அதில் பேசிய ஒருவன், உன் பையனை நாங்க கடத்தி வச்சிருக்கிறோம், 3 கோடி தந்துவிட்டு உன் பையனை வந்து அழைத்துக்கொண்டு போ எனச்சொல்லியுள்ளார்கள். இதில் அதிர்ச்சியாகி பேச, உன் பையன் உயிர் முக்கியம்னா 3 கோடி தா என சொல்லியுள்ளார்கள்.


உடனே அந்த பெண்மணி, வெளியூரில் உள்ள தனது கணவருக்கு தகவல் கூறியுள்ளார். அவர் இந்து முன்னணி அமைப்பின் மண்டல அமைப்பாளர் மகேசிடம் இதுப்பற்றி கூறியுள்ளார். அவர் இதுப்பற்றி போலிஸ் எஸ்.பி பர்வேஸ்குமாருக்கு தகவல் தந்துள்ளார். அதிர்ச்சியான அவர் உடனே டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன், சங்கர், இன்ஸ்பெக்டர் நாகராஜ் கொண்ட தனிப்படை அமைத்துள்ளார்.


அந்த தனிப்படை போலிஸார், கோகுலன் வீட்டுக்கே வராமல் அந்த பெண்மணிக்கு சில திட்டங்களை கூறியுள்ளனர். அதன்படி அந்த பெண்மணி நடந்துக்கொள்ள துவங்கியுள்ளார். இந்து முன்னணி மகேஷ், கோகுல் வீட்டுக்கு சென்று கடத்தல்காரர்கள் போன் செய்து பேசும்போது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் அவரும் பேசியுள்ளார்.


கடத்தல்காரன் பேசிய எண்ணை ட்ராக் செய்தபோது, அது பள்ளிக்கொண்டாவை காட்டியுள்ளது. அங்கு தேடுதல் வேட்டை நடத்தியபடி, கடத்தல்காரர்களுடன் அந்த பெண்மணி, உடனே 3 கோடி தயார் செய்ய முடியாது. வீட்ல 5 லட்சமும், 50 பவுன் நகையும், இடங்களோட டாக்மெண்ட் இருக்கு. அதை எடுத்து வந்து தர்றேன் என்று பேசியுள்ளார், முதலில் அதற்கு அவவர்கள் மசியவில்லை.


கடத்தல்காரன் பேசுவதை ரெக்கார்ட் செய்து போலிஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கடத்தியவர்கள் இளம் வயது உடையவர்கள் என முடிவுக்கு வந்து வலை விரித்தனர். அடுத்தடுத்து போன்கால்களில் 50 லட்ச ரூபாய் தயாராகவுள்ளது எனச்சொல்ல, சேர்க்காடு பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார்கள். அங்கு உறவினர் ஒருவருடன் கோகுலின் அம்மா காரில் சென்று பணத்தை தந்துள்ளார். அப்போது அங்கு மப்டியில் இருந்த போலிஸார் கடத்தல் கும்பலை பிடித்துள்ளனர்.


பிடிப்பட்டவர்கள், கோகுலின் வகுப்பு தோழர்கள் மற்றும் அதே கல்லூரியில் படிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. சம்மந்தப்பட்டவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது, பணக்கார பையனாக இருந்தான், நிறைய செலவு செய்தான் அதனால் கடத்தினோம் எனச்சொல்லியுள்ளார்கள். அதோடு, 3 கோடி வாங்கி அதில் 10 ஏழைக்கு உதவலாம்னு இருந்தோம் எனச்சொல்ல, கடத்திட்டு நல்லது செய்ய நினைச்சேன்னு கதை சொல்றானுங்கன்னு கடுப்பாகியுள்ளனர்.


கடத்தப்பட்டதாக கூறப்படும் கோகுல் மீதும் போலிஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது. அவனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு போலிஸார் விசாரிக்க தொடங்கியுள்ளார்கள். கோகுலின் தந்தை கென்னடி குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள் போலிஸார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT