வேலூர் மாவட்டம், காட்பாடி காவல்நிலைய எஸ்.ஐ ராஜசேகருக்கு, கஞ்சா விற்பனை குறித்து வந்ததகவலின் அடிப்படையில் போலீஸார் பிப்ரவரி 10ந் தேதி பழைய காட்பாடியில் உள்ள ஒரு வீட்டில்நள்ளிரவு அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். அந்த ரெய்டில் 12 கிலோ கஞ்சாவுடன் 8 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது, 8 பேரும் வேலூரில் பிரபலமாகவுள்ள விஐடி பல்கலைகழகத்தில் படிப்பதாக தகவல் கூறியுள்ளனர். அதனை போலீஸாரும் உறுதி செய்துக்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sdsdrtrtrt.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ளது பிரபலமான விஐடி நிகர்நிலை பல்கலைக்கழகம். முன்னாள்அரசியல்வாதியான விஸ்வநாதன் குடும்பத்தாரால் நடத்தப்படுகிறது. இந்த நிகர்நிலை பல்கலைகழகத்தின் கிளைகள் சென்னை, போபால் போன்ற இடங்களிலும் உள்ளன.
இந்த பல்கலைகழகத்தில் சேர தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. பெரிய அளவில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் பணக்காரர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் படிக்கும் பல்கலைகழகமாக இருப்பதால் யாரையும் இந்த பல்கலைக்கழகம் கட்டுப்படுத்துவதில்லை. இதனாலயே கஞ்சா விற்பனை செய்து 12 மாணவர்கள் சிக்கியுள்ளார்கள்.
அடிக்கடி இந்த பல்கலைகழகத்தில் பலமுறை மாணவர்களுக்குள் கத்தி குத்துயெல்லாம் நடந்துள்ளன. பல்கலைகழக வளாகத்தில், விடுதியில் மாணவர்கள் தற்கொலை என தகவல்கள் வெளியே வரும், அதன் உண்மை தன்மையை வெளியே வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தனது அரசியல், பண அதிகாரத்தை வைத்து தடுத்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)