ADVERTISEMENT

வேலூர் தேர்தல் : 10.25 மணி நிலவரம்

10:17 AM Aug 09, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் தொடங்கியதில் இருந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்தார். 9 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார். ஏ.சி.சண்முகம் பின்னடைவை சந்தித்தார். அதன் பின்னர் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில், காலை 10.25 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,18,874 வாக்குகள் பெற்று 13,251 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,05, 623 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,041 வாக்குகள் பெற்றுள்ளார்.


வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இதில், காலை 10.25 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் முன்னிலையில் 13, 251 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT