Sambrani came to smoke; Police in action at POCSO

Advertisment

வேலூரில் சாம்பிராணி புகை போட வந்த நபர்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆக்ராவை சேர்ந்த காலீஸ் பாஷா என்ற நபர் அந்தப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் சாம்பிராணி புகை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று காட்பாடி பகுதியில் சாலையோரம் இருந்த கடை ஒன்றுக்கு சாம்பிராணி புகை போட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்தஆறு வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அச்சிறுமியின் உறவினர் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆத்திரத்தில் காலீஸ் பாஷாவைஅந்தப் பெண் தாக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.