ADVERTISEMENT

“வெட்கத்தை விட்டு சொல்றேன்; இதில் வருத்தம் கிடையாது” - தனது நிலையை விளக்கும் செல்வம்

04:52 PM Feb 14, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரிச்சூர் செல்வம் குறித்தான திருச்சி சூர்யாவின் பேச்சிற்கு வரிச்சூர் செல்வம் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.

சில தினங்கள் முன் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏம்ப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. ஃபோட்டோ தான் எடுத்தது. இது குத்தமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சூர்யா, “நான் சில தினங்கள் முன் காயத்ரி ரகுராம் வரிச்சூர் செல்வத்தை சந்தித்தது குறித்து ட்விட்டரில் போட்டிருந்தேன். அதற்கு வரிச்சூர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதைக் கூறி இது குறித்து திருச்சி சூர்யாவிடம் பேசினேன் என்றும் அதன் பிறகே அவர் அதை எடுத்தார் என்றும் சொல்கிறார். நேற்றிலிருந்து அனைத்து பத்திரிகைகளும் திருச்சி சூர்யா வரிச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகிறது. தனிப்பட்ட முறையில் அவர் கேட்டுக் கொண்டதன் காரணமாகத்தான் பதிவை நீக்கினேன். வரிச்சூர் செல்வம் என்ற ரவுடியிடம் காயத்ரி ரகுராம் புகைப்படம் எடுக்க வேண்டிய காரணம் என்ன? ரவுடியை ரவுடி எனச் சொல்லாமல் வேறு என்ன சொல்வது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வரிச்சூர் செல்வம், “எனக்கு இருக்கும் அனைத்து புகழையும் விட்டுவிட்டு என்னை ஜோக்கர் என எழுதிக்கொள்ளுங்கள். தாதா என எழுத வேண்டாம் தாத்தா என எழுதிக்கொள்ளுங்கள் எனச் சொல்கிறேன். இவை அனைத்தும் என் குடும்பத்தின் நலனைக் கருதி. என் குடும்பம் என்னால் பாதிக்கப்படக் கூடாது. வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இதில் எனக்கு வருத்தம் கிடையாது.

திருச்சி சூர்யா என்னை ரவுடி எனச் சொல்கிறார். என்னை ரவுடி எனச் சொல்லுவதற்கு இவர் யார்? திருச்சி சூர்யா சமீபத்தில் பஸ்ஸை திருடிச் சென்றுவிட்டார். உங்கள் அனைவருக்கும் தெரியும். திருச்சி சூர்யாவை நான் பஸ் திருடன் எனச் சொன்னால் நன்றாக இருக்குமா? சூர்யாவை வாப்பா பஸ் திருடா? எப்படி இருக்க? என்ன பஸ் எல்லாம் திருட ஆரம்பிச்சுட்ட எனச் சொன்னால் நன்றாக இருக்குமா? சொல்லுங்கள். மனிதனை இழிவுபடுத்தக் கூடாது. மனிதன் திருந்திவிட்டால் அவனுக்கு உதவியாகத் தான் இருக்க வேண்டும். உங்கள் ஊரில் நீ பெரியாள். எங்க ஊரில் நான் எனச் சொல்லக்கூடாது. தமிழ்நாட்டில் இல்லாத ஜெயில் கிடையாது. நான் கழுகு. சூர்யா காக்கா மாதிரி. அவர் இப்பொழுது தான் பறந்து கொண்டு உள்ளார்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT