nn

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கூட்டாளியான செந்தில் என்பவர் காணாமல் போனதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மன வேறுபாடு காரணமாக கூட்டாளியாக இருந்த வரிச்சியூர் செல்வமும் செந்திலும் தனியாகப் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் அழைப்பதாகசெந்தில் தன்மனைவியிடம் கூறிவிட்டுச்சென்ற நிலையில், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது விருதுநகரில் வைத்து ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். சாத்தூர் நீதிமன்றத்தில் செல்வத்தை போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம் மீது ஆள் கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisment