ADVERTISEMENT

'வெண்ணிலா கபடி குழு' திரைப்பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

09:30 AM Dec 03, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரி வைரவன். குறிப்பாக வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரியுடன் சேர்ந்து பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் இவரது நடிப்பு பலரைக் கவர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.

இந்நிலையில், மதுரையில் வசித்து வந்த ஹரி வைரவனுக்கு நேற்று இரவு 12 மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தனது உடல்நிலை குறித்து அவர் யூடியூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டியை தொடர்ந்து அவருக்கு பலர் உதவி செய்தனர். இந்நிலையில் அவரது உயிரிழப்பு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று மதுரையில் நடைபெற இருக்கும் நிலையில் அவருடன் பணியாற்றிய சினிமா கலைஞர்கள், நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT