ADVERTISEMENT

வாஜ்பாய் மறைவு;அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு!

10:52 PM Aug 16, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவால் தமிழகம் மற்றும் புதுவைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை (17/8/2018) நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT