ADVERTISEMENT

போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் -வைகோ

09:48 PM Nov 26, 2018 | bagathsingh


ADVERTISEMENT

கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று நேரில் பார்த்தார். அப்போது கீரமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது டிசம்பர் 3 ந் தேதி ஆளுநர் மாளிகைளை முற்றுகையிடும் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றார்.

ADVERTISEMENT


சுற்றுப்பயணம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் பார்த்து விவசாயிகளை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டு வருகின்றனர். அதே போல கீரமங்கலம், கொத்தமங்கலம், அணவயல் கைகாட்டி, மாங்காடு, வடகாடு உள்ளிட்ட பல கிராமங்களில் பாதிக்கப்பட்டுள்ள தென்னை, வாழை, பலா போன்ற மரங்களையும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டவர் விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.




விமானத்தில் பார்த்தால் தீ குச்சிகளாகத் தெரியும்

கஜா புயல் என்பது தீவிரமாக தாக்கியதால் கிராமங்களும் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது, ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள் உணவைக் கூட எதிர்பார்க்காமல் ஆபத்துகளையும் உணராமல் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் மற்ற எந்த பணியும் நடக்கவில்லை.


மேலும் புயலால் பாதிக்கப்பட்டு மரங்கள் ஒடிந்து நாசமாகி இருப்பதை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் விமானத்தில் இருந்து பார்த்தால் மடல் முறிந்து நிற்கும் மரங்கள் நிற்பது போல தான் தெரியும். அந்த மரங்கள் பயனளிக்காது என்பது எப்படி தெரியும். அதனால் தான் கீழே இறங்கி பார்க்க வேண்டும்.


ஆளுநர் மாளிகை முற்றுகை :


அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது.. இத்தனை பாதிப்புகள் இருக்கிற போது தமிழக மக்களுக்கு விவசாயிகளுக்கு ஒரு ஆறுதல் சொல்லக் கூட பிரதமரால் முடியவில்லை. இந்த நிலையில் தான் தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் சென்று நிவாரணம் கேட்டு சென்றுள்ளார். ரூ. 15 ஆயிரம் கோடி கேட்டிருப்பது பத்தாது. ரூ. 25 ஆயிரம் கோடிகளை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் ஈடேற முடியும்.



மேலும் ஏழு தமிழர் விடுதலை வேண்டும் என்று தமிழக மக்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது 3 மாணவிகளை எரித்துக் கொண்ட 3 அ.தி.மு.க வினருக்கு விடுதலை கொடுத்துள்ளனர். ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி டிசம்பர் 3 ந் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக கூறியுள்ளார். அதே போல அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள். திட்டமிட்டபடியே ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும். ஆளுநர் எங்களுக்கு வேண்டாம் என்பதையும் வலியுறுத்துவோம் என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT