ADVERTISEMENT

கொள்ளிடம் கரையோர மக்கள் அவசரமாக வெளியேற்றம்- உணவு இன்றி முகாம்களில் தவிப்பு!!

07:49 PM Aug 18, 2018 | selvakumar

ADVERTISEMENT

கொள்ளிடத்தில் சுமார் 3 லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் கரையோரம் உள்ள பொதுமக்களை அதிகாரிகள் வெளியேற்றிவருகின்றனர். கொள்ளிடக்கரை பலமிழந்து சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதாலும், கர்நாடக அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்படுவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் அமராவதி ஆறு மூலம் காவிரியில் கலந்து வருவதாலும் கடந்த ஐந்து நாட்களாக அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றிலும், அதன் கிளை ஆறுகளிலும் வந்து கொண்டிருக்கிறது.காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் திருப்பி விட்டுள்ளனர் இருகரையையும் தொட்டுக்கொண்டு அபாயகரமான நிலைையில் தண்ணீர் செல்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 33 ஊராட்சிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் தட்டுமால் என்ற கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகள், வயல்களில் புகுந்தது. அதேபோல் பாபநாசம் அருகே பட்டுக்குடி கிராமத்தில் வாய்க்கால் வழியாக கொள்ளிடம் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

அதேபோல் வேளாண்மைத்துறை அமைச்சர் துறைக்கண்ணுவின் சொந்த ஊரான பாபநாசம், கூடலூர், பட்டுக்குடி ஆகிய இரு கிராமங்களில் தண்ணீர் புகுந்து 70 வீடுகளை சூழ்ந்தது, அங்கு வசித்த 110 பேர் புத்தூரில் உள்ள கிராம சேவை மையம், சமுதாயக் கூடம், தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றின் நடுவில் தீவாக அமைந்துள்ளது அனைக்கரை அங்கு தண்ணீர் புகுந்து விநாயகம் தெருவில் 30 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி அரசு உயர்நிலைப் பள்ளியில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT