Skip to main content

கொள்ளிடம் முழுமையாக இடிந்து விழும் அபாயம்! கொள்ளிடம் அணை உடைப்புக்கு விசாரணை கமிஷம் அமைக்க வேண்டும் - தோழர் நல்லகண்ணு

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மதகுகளில் விரிசல் மற்றும் அணையின் அடித்தளம் பிளாட்பாரத்தில் விரிசல் இருப்பதாக நீரில் மூழ்கி ஆய்வு செய்த நீச்சல் வீரர்கள் தெரிவித்துள்ளனர். கடைசியில் நீரில் மிதவையில் செல்லும் போது கீழே விழுந்து மூழ்கியவர்களை காப்பாற்றினார்கள்.

 

nallakannu

 

 

 

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. இதை 90 இலட்ச ரூபாய் செலவில் தற்காலிக மணல் மூட்டை மணல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். 

 

மதகுகளை அடைக்க இதுவரை 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது இதுவரை 1.25 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே 

 

இதற்காக, தண்ணீருக்கு அடியில் சென்று அணையின் மதகுகளில் விரிசல் உள்ளதா? அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக்’ சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

 

அவர்களில், ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு (வயது56), சிவா (40), சந்தனகுமார் (40) ஆகிய 3 பேரும் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.

 

அவர்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் ஒவ்வொரு மதகையும் ஆய்வு செய்தனர். தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் உறுதித்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர். அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

 

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை சீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய அணைப் பகுதியும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

 

இதற்கு இடையில் இன்று காலை கட்டுமான பொருட்கள் படகில் ஏற்றி செல்லப்பட்டு, பணிகள் நடந்து வரும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆற்றின் நடுவே செல்லும் போது திடீரென படகு ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். பாலம் உடைந்த பகுதியில் சென்று போது வண்டியில் இன்ஜின் இழுக்க திணறியதால் கட்டுபாட்டை இழந்து வண்டி தண்ணீருக்குள் கவிழ்ந்தது. அதில் இருந்த 2பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு இடையில் தோழர் நல்லக்கண்ணு , தோழர் மகேந்திரன், செல்வராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடைந்த கொள்ளிட அணையை வந்து பார்வையிட்டு சென்றார். 

 

அணை உடைந்ததை பார்த்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு 

தமிழக அரசின் தவறான நடவடிக்கை, ஆறுகளை கொள்ளையடித்தது தான் 2005 ஆம் ஆண்டு 4 இலட்சம் கன அடி தண்ணீர் வந்திருக்கிறது. ஆனால் தற்போது 65000 கனஅடி தண்ணீர் தான் வந்திருக்கிறது. தற்போது மழையையும் பெய்யாமல், வந்த தண்ணீரை கூட தாக்குபிடிக்க முடியாமல் அணை உடைந்திருக்கிறது என்றால் இந்த அணை உடைப்பு பற்றி தனி கமிஷனம் போட்டு விசாரணை செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் மணலை அள்ளுவதற்கு பதிலாக கொள்ளையடிப்பதையே இலட்சியமாக கொண்டு உள்ளார்கள். தினமும் 5,000, 6,000 லாரிகளில் மணல் எடுத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வரை கண்டித்தும் மணல் கொள்ளையை தமிழக அரசு தடுக்காமல் தவறு செய்தால் தான் தற்போது நிலை ! மணலை 20 அடி லிருந்து 40 அடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றார். ஆந்திராவிலும், கேரளாவிலும், பொக்லைன் கொண்டு மணல் அள்ளகூடாது என்று விதியிருந்தும் ஆனால் தமிழ்நாட்டில் பொக்லைன் மூலம் மணல் அள்ளி வெளிமாநிலங்களுக்கு விற்றிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்