ADVERTISEMENT

யூனியன் பேங்க் அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை! தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

07:28 AM Sep 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை, 2006-2007 ஆம் ஆண்டில் நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியதன் மூலம், அவ்வங்கிக்கு 6.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, வங்கி அதிகாரி கண்ணன், மஞ்சுளா, நரேஷ்குமார், பார்வதி ராமகிருஷ்ணன், நேஷனல் மெடிசின் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயின் ஆகியோர் மீது சிபிஐ கடந்த 2009- ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை சென்னை 11- வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர் விசாரித்தபோது, சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் எம்.வி.தினகர் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி ஜவஹர் பிறப்பித்த உத்தரவில், அண்ணாசாலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளர் கண்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், நேஷனல் மெடிசின் நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயினுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தார். அவரின் நிறுவனத்திற்கும் 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சுளா என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுள்ளது. பார்வதி ராமகிருஷ்ணன் என்பவருக்கு, ஒரு லட்சம் அபராதமும், 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT