ADVERTISEMENT

வேலைக்காக வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்... சொந்த ஊருக்குச் சென்ற போது நிகழ்ந்த அசம்பாவிதம்!

04:41 PM Sep 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது ப.கொத்தனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி என்பவரது மகன் முனியன்(32). இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முனியன் என்பவரது மகள் அனிதா(31) இவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்தனர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அனிதா தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டு வந்துள்ளார். இதனால் அனிதாவுக்கும் அவரது அண்ணன் ஆனந்த் வேலுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஆனந்த வேலு கடந்த 12ஆம் தேதி அனிதாவிடம் தொலைப்பேசியில் பேசி சொத்தில் பங்கு பிரிப்பதற்கு ஏற்பாடுகள் தயார் செய்துள்ளோம் அந்தப் பத்திரத்தில் நீ கையெழுத்து போட வேண்டும் எனவே ஊருக்கு புறப்பட்டு வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் ப. கொத்தனூர் கிராமத்தில் உள்ள தனது பிறந்த வீட்டிற்கு அனிதா வந்துள்ளார். அப்போது வீட்டில் அனிதாவின் அண்ணன் ஆனந்தவேல் அவருடைய மனைவி ஆகிய இருவர் மட்டும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மதியம் அந்த வீட்டில் தங்கியிருந்த அனிதா மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து அனிதாவின் கணவருக்கு கூட அனிதா இறந்ததை தெரிவிக்காமல் அவசர அவசரமாக அனிதாவின் உடலை அவரது அண்ணன் ஆனந்தவேலு மற்றும் அவரது உறவினர்கள் அந்த ஊரில் உள்ள சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று எரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து அனிதாவின் கணவர் முனியன் வேப்பூர் காவல்நிலையத்தில் அனிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திட்டக்குடி டி.எஸ்.பியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள சிவா சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டு அனிதாவின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT