கடலூர் முதுநகர் சிவானந்தபுரத்தை சேர்ந்த ஜெய்வின் ஜோசப் என்பவரை காணவில்லை என்று கடந்த 6-ஆம் தேதி அவரது தாயார் பிரதீபாகடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அந்த புகாரை வழக்குப்பதிவு செய்த முதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கடலூர் முதுநகர் மற்றும் காரைக்காடு பகுதியை சேர்ந்த விஜய், பிரபாகர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ஜெய்வின் ஜோசப்பை கொலை செய்து குடிகாடு உப்பனாற்ங்கரையில் புதைத்துள்ளதாக தெரியவந்தது.
அதைடுத்து கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் பால்சுந்தர், தாசில்தார் ரஞ்சித் பிரவின் மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இன்று சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் பிரபாகரன் இருவரையும் தவிர கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும், கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.