ADVERTISEMENT

மனு கொடுக்கும் போராட்டம்

02:54 PM Jul 12, 2019 | rajavel

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் கிராமத்தில் பல கோரிக்கைகள் வலியுறுத்தி அகில இந்திய விவசா தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் திருநாவலூர் மேற்கு ஒன்றிய தலைவர் கே.கே.கொளஞ்சி தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

போராட்டத்தில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், ஒன்றிய பொருளாளர் மாணிக்கம் ஆகியோர், 100 நாள் வேலை வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு தான் வேலை என்று மக்களை ஏமாற்றக்கூடாது. சுழற்சி முறை வேலை என்று வேலை நாட்களை குறைக்கக்கூடாது.


சட்டக்கூலி ரூ 229 / குறைக்காமல் கூலி வழக்கு வேண்டும் என பல கோரிக்கைகள் வலியுறுத்தி உரையாற்றினார்கள். இந்த போராட்டத்தின் போது சிபிம் ஒன்றிய செயலாளர் (மே) டிஎஸ்.மோகன், டிஓய்எப்ஐ-யின் ஒன்றிய செயலாளர் எ.தங்கமணி, வி.ச.ஒன்றிய செயலாளர் கண்ணன், ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆர்ப்பாட்டம் முடிந்தும் பொதுமக்கள் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தின் மேலாளர் மஞ்சமுத்துவிடம் மனுக்கள் கொடுத்தனர்.


பேட்டியின் போது பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மை என்ற மூதாட்டியானவர் 100 நாள் வேலை வழங்கும் திட்டத்தில் வேலை செய்த 40 நாள் கூலியை கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர் என்றும் வயதான காலத்தில் உழைத்து தான் கால் வயிற்றிக்கு கஞ்சி குடிக்கும் நிலமை உள்ளது அதனால் ஏரிவேலை செய்த 40 நாள் வேலை செய்த நிலுவை கூலியை பணத்தை உடனே வழங்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பல முறைகள் மனு கொடுத்தும் பயனில்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT