விழுப்புரம் மாவட்டம் உளுந்துந்தூர்பேட்டையில் அரசு போக்குவரத்து கழககிளை பணிமனை உள்ளது. இதில் உளுந்தூர்பேட்டை டவுனை சேர்ந்த கண்ணகி பணிமனையில் கண்காணிபாளராக பணி செய்து வந்துள்ளார்.கண்ணகி வரவு செலவு கணக்கில் முறைகேடு செய்துள்ளதாகவும், இதற்கு காரணம் கிளை மேலாளரும், கண்காணிப்பாளர் கண்ணகியும்தான் என்று விழுப்புரத்தில் உள்ள போக்குவரத்து கழக உயர்அதிகாரிகள் மேலாளர் மற்றும் கண்ணகி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனால் கோபமும், வருத்தமும் அடைந்த கண்ணகி இன்று உளுந்தூர்பேட்டை பஸ்டாண்டில் அழுதபடியே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது நான் எந்த தவறும் செய்யவில்லை அதிகாரிகள் செய்த தவறுக்கு என்னை பலிகடா ஆக்குகிறார்கள் என்று அழுதபடியே கூறினார். அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்டனர். பொதுமக்கள் உடன் அங்கு வந்த போலீசார் கண்ணகியிடம் உங்கள் துறைஅதிகாரிகளிடம் விளக்கமளித்து அதில் இருந்து விடுபடுமாறு ஆறுதல் கூறியதன் அடிப்படையில் கண்ணகி தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் பஸ்டாண்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.