ADVERTISEMENT

எட்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்ட இரு இளைஞர்கள்! கல்லூரி முன்விரோதம் காரணமா? 

10:47 AM Nov 17, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கும்பகோணத்தில் இரண்டு இளைஞர்களை வழிமறித்து எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டியது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கும்பகோணம் மகாவீர் நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் யோகேஸ்வரன் (25). சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவரின் மகன் நந்தகுமார் (22). நண்பர்களான இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிவருகின்றனர். இந்நிலையில், நேற்று (16.11.2021) இரவு இருவரும் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள லேப்டாப் சர்வீஸ் செண்டரில் தங்களது லேப்டாப்பை சர்வீஸ் செய்ய கொடுத்துவிட்டு, வீடு திரும்பியுள்ளனர். அப்படி திரும்பியபோது, சபரி நகர் அருகே 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்துவந்து வழிமறித்து, கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர்.

ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்ந இருவரும், மர்ம கும்பலிடமிருந்து தப்பிப்பதற்காக போராடி ஓடியுள்ளனர். ஆனாலும் அவர்களை அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று யோகேஸ்வரனை சரமாறியாக எட்டு இடங்களில் வெட்டினர். அவருடன் சென்ற நந்தகுமாரையும் விடாமல் வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த யோகேஸ்வரனின் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) மோகன் தாஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்தக் கொலை முயற்சி குறித்து விசாரித்துவரும் போலீசார், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியில் நடந்த தகராறில் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரித்துவருகிறோம்” என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT