ADVERTISEMENT

விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் பலி, 4 பேர் படுகாயம்

12:04 PM Sep 10, 2018 | sundarapandiyan


விருத்தாசலம் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகள் 2 பெண்கள் பலி, 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் காட்டு நெமிலியை சேர்ந்த ராணி மற்றும் அரசிளங்குமாரி ஆகிய இருவரும் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள். வழக்கம்போல் வேலைக்காக சென்றவர்கள் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியவடவாடி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது விருத்தாசலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே ராணி என்பவர் பரிதாபமாக உயிரிழிந்தார். அடிபட்ட அரசிளங்குமரி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழிந்தார்.

இந்த இருவர் அடிபட்ட செய்தி கேட்டு பார்ப்பதற்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்த அவர்களது உறவினர்களான மணி, முருகன் ஆகிய இருவரும் விருத்தாசலம் ரயில்வே மேம்பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த அடியுடன் காயம் எற்பட்டது. இவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் மணி என்பவர் மேல் சிக்கிச்சைக்காக முண்டியாம்பாக்கம் கொண்டு செல்லப்பட்டார்.

இதேபோல் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் உள்ள டீக்கடைக்கு கொத்தாலி மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் சென்றிருந்தனர். அப்போது விருத்தாசலத்திலிருந்து வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்தது. அதில் டீ அருந்தி கொண்டு இருந்த இருவரும் பலத்த காயத்துடன், சுய நினைவை இழந்தனர். பின்னர் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு சென்றனர்.

தொடர் கதையாகி வரும் வாகன விபத்துக்கு சாலையோர எச்சரிக்கை பலகைகள், கிராமங்களில் தெரு விளக்குகள் சரிவர அமைக்கப்பாடததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் விருத்தாசலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதால்தான் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்றும் புகார் கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு விரைவாக செயல்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT