ADVERTISEMENT

'அமைதிப்படை' ஓ.பி.ஸ்... 'தகரம்' தங்க தமிழ்ச்செல்வன்... - போடியில் டி.டி.வி.தினகரன் பேச்சு!

07:44 AM Mar 30, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

போடி தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் முத்துச்சாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்க போடி வந்திருந்தார் டி.டி.வி.தினகரன். பிரசாரத்தின் போது, ஓ.பி.எஸ் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனை கடுமையாக தாக்கிப் பேசினார்.

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் அக்கட்சி தேனி வடக்கு மாவட்டச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதேபோல, அ.ம.மு.க சார்பில், அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளரான முத்துச்சாமி போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, போடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தநிலையில், முத்துச்சாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி வந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, பெரியகுளம் வர இரவு 10 மணியைக் கடந்ததால், பெரியகுளத்தில் காத்திருந்த தொண்டர்களுக்கு கையசைத்துவிட்டு, போடி சென்றார். அங்கே, தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரன் நேற்று காலையில் போடி தேவர் சிலை அருகே பிரச்சாரம் செய்தார்

டி.டி.வி.தினகரனுக்கு, கட்சித் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்றனர். மலர் தூவுவதை நிறுத்தச்சொன்ன டி.டி.வி.தினகரன், மைக்கை பிடித்து, “இப்படித்தான் பிரச்சாரத்தின் போது, மலர் தூவி, அதில் இருந்த புழு ஒன்று உடலில் ஏறிவிட்டது… பன்னீர், தங்கம் மாதிரி” என்றார். இதனைக் கேட்ட அ.ம.மு.க தொடர்கள் ஆரவாரம் செய்ய, தனது பேச்சைத் தொடர்ந்த டி.டி.விதினகரன் பேசும்போது,

''நான் பன்னீரை சேர்மன் என்று தான் கூப்பிடுவேன். அவரும் என்னை அப்படி தான் கூப்பிடச் சொல்வார். இரண்டு நாள்கள் எங்களோடுதான் இருந்தார். யார் சொன்னாங்கனு தெரியல., திடீர்னு ஞான உதயம் பிறந்தது மாதிரி தியானம் பண்ண போயிட்டார். சசிகலா மீது கலங்கம் வந்துவிடக்கூடது என்பதற்காக தான் தர்மயுத்தம் நடத்தினேன் என தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார். எனக்கு சிரிப்பு தான் வருது. இங்கே இன்னொருத்தர் இருக்காறே… தங்க தமிழ்ச்செல்வன். அவர் எதுக்கு நம்ம கூட வந்தார். எதுக்கு நம்ம கூட இருந்தார்னு தெரியல. அவர் பெயரில் தான் தங்கம். குணத்தில் தகரம். இவர்கள் நமக்கு எதிரிகள், துரோகிகள் என யாரை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொன்னார்களோ, அவர்களுடன் சேர்ந்துகொண்டார். 2001 ம் ஆண்டு நான் எம்.பி’யாக இருந்த போது, அமைத்திப்படை பன்னீரும், தகரம் தங்க தமிழ்ச்செல்வனும் எப்படி இருந்தார்கள். இப்போது எப்படி இருக்கிறார்கள் என பாருங்கள் போடி மக்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும்'' என்று பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT