தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று சென்னை வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ''நம்மை பார்த்து பயந்த காரணத்தால் எதிர்க்கட்சியினர் தொந்தரவு தருகின்றனர். அரசியல் சாக்கடை என தெரிந்தே அதனைசுத்தம் செய்ய வந்திருக்கிறோம்.நான் ஹெலிகாப்டரில் செல்வதை கேலி செய்கிறார்கள். அடுத்த முறை அவர்களுக்கும்அது தேவைப்படும்'' என்றார்.