ADVERTISEMENT

“வடமாநில தொழிலாளர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது” - டிடிவி கவலை 

02:59 PM Feb 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சமீபகாலமாக வடமாநிலத் தொழிலாளர்களின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் அதிகம் வடமாநிலத் தொழிலாளர்களின் பெயர்களே வருகிறது. சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள ஏ.டி.எம் களில் பணம் திருட்டு சம்பவத்தில் கூட ஹரியானவைச் சேர்ந்த கும்பல்தான் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்து வருவது அச்சத்தையும் கவலையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன.

மேலும், அவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT