ADVERTISEMENT

அடிதடி, மரணம் என திருச்சியை ரணகளப்படுத்திய மது விற்பனை

05:26 PM May 08, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

சம்பவம் - 1

கரோனா ஊரடங்கு காரணமாக 44 நாட்களாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

காலை முதலே மது குடிப்பவர்கள் 2 முதல் 3 கி.மீ தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

இந்தநிலையில், திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் மது அருந்தி விட்டு படுத்திருந்தவர் உயிரிழந்துள்ளார். மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மலைக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


சம்பவம் – 2

மாட்டு வண்டி தொழிலாளியான ரஞ்சித்குமார் காலையிலேயே மது குடித்தவுடன் பழைய பகை நினைவுக்கு வர அதே பகுதியை சேர்ந்த கோபி, வெங்கட் ஆகியோரை தீர்த்து கட்ட அரிவாளுடன் கிளம்பினார். இதை கேள்விப்பட்ட கோபி, வெங்கட் கும்பல் கடுப்பில் முழு போதையாகி, பதிலுக்கு ரஞ்சித்குமாரை தேடி இருக்கும் கண்டுபிடித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ஜீயபுரம் போலிசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.


சம்பவம் – 3

சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அரசாங்கத்தில் கடந்த ஒரு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து யாரும் உள்ளிருந்து வெளியேவும், வெளியிலிருந்து உள்ளேவும் வரமுடியாத சூழ்நிலையில் தெருவில் மதுக்கடை திறந்ததும் மதுபோதையில் அடிதடியில் ஈடுபட்டு மண்டை உடைந்துள்ளது. இந்த பிரச்சனை போலீஸ் வரை சென்றுள்ளது. ஆனால் போலிசோ, தடைசெய்யப்பட்ட பகுதிக்கு மதுபாட்டில் எப்படி சென்றது என்கிற கேள்வி வரும். தேவையில்லாமல் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று சமரசம் பண்ணி அனுப்பி வைத்தனர்.

மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் திருச்சி மாநகர் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். இரவு நேரங்களில் மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ் மதுபாட்டில்களை யாரும் திருடிவிடகூடாது என்று மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு பணியில் இருக்கிறார்.

ஆக அரசாங்கத்திற்கு மக்களை விட மது தான் முக்கியம். ஆனால் இந்த மது வெளியே வந்தால் சட்டம் ஒழுங்கு கேலி கூத்தாக மாறிவிடுகிறது. இதனால் எதிர்கட்சிகள் மதுக்கடைகளை திறக்ககூடாது என்று போராட்டம் வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT