ADVERTISEMENT

தூய்மை பணியில் ஈடுபட்ட என்.சி.சி. மாணவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள்

03:53 PM Dec 08, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடல் நீரின் தூய்மையைப் பாதுகாக்கவும் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் மாசுகளை அகற்றுவதற்காக என்.சி.சி. அமைப்பும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பும் இணைந்து செயல்படுத்தி வரும் புனித் சாகர் அபியான் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள என்.சி.சி மாணவர்கள் மூலம் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி நீர்நிலைகளைத் தூய்மை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள், காவிரி ஆற்றுப் படித் துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். என்.சி.சி. மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் பொதுசுகாதாரம், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள் சுபேதார் தானாஜி போபன், சுபேதார் சதாசிவன் மற்றும் ஹவில்தார் சுரேஷ் ஆகியோர் தலைமையில் காவிரி ஆற்றுப் படித்துறைகளில் கிடந்த குப்பைகளை அகற்றியும், படித்துறைகளை தூய்மை செய்தும் அங்கிருந்த பொதுமக்களிடையே நீர்நிலைகளின் தூய்மையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT