ADVERTISEMENT

"போக்சோவில் கைதானவருக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" - பாஜக மாவட்ட தலைவர்

03:24 PM Jan 24, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் அதிமுகவின் கட்சி உறுப்பினராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக சார்பாக, பாஜகவின் இளைஞர் அணி திருச்சி மாவட்டச் செயலாளராக கட்சி பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்தபோது அதிமுக பிரமுகர் ஒருவருடன் நட்பாக இருந்து அதன் மூலம் அவரது மகளான 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி காதலைத் தொடர்ந்துள்ளார். இதனிடையே பாஜகவில் பதவி கிடைத்தவுடன் 17 வயது சிறுமியை அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி வினோத்திடம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருவரங்கரம் போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். இதையடுத்து திருவரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட பாஜகவின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வினோத் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருச்சி மாவட்ட பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் கடந்த டிசம்பர் மாதமே கட்சியின் இளைஞர் அணி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT