ADVERTISEMENT

அரசியலுக்காக திருச்சி சாரதாஸ் ஐவுளிகடையில் ஐடி ரெய்டா ?

01:38 AM Jan 11, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி என்எஸ்பி ரோட்டில் இயங்கி வருகிறது சாரதாஸ் ஜவுளிகடை. மிகப்பிரம்மாண்டமான கட்டிடத்தில் இயங்கி வரும் இக்கடையில் எந்நேரமும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கும். புதிதாக இந்த கடைக்கு வருபவர்கள் வியந்து போகும் அளவுக்கு இதன்பிரமாண்டம் இருக்கும். பணியாளர்களே 600 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு தனி விடுதி, வீடுகள் என்று தனித்தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கடையில் வருமான வரி ஏய்ப்பு நடப்பதாக சமீபகாலமாக வருமான வரித்துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்துள்ளது என்று இன்று காலை 11.30 மணியளவில் திடீரென, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம், கரூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக கடைக்குள் புகுந்தனர்.

பின்னர் அனைத்து பிரிவுகளுக்கும் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனை திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் இந்த கடையில் தடை செய்யப்பட்ட 2 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பைகளை சப் கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சாரதாஸ் நிறுவனம் தேர்தல் காலங்களில் அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கும் தேர்தல் நிதி கொடுப்பது வழக்கம். தற்போது எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும் என்கிற சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் பெரிய தொழில் நிறுவனங்களை வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறதோ என்கிற சந்தேகம் வலுவடைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT