ADVERTISEMENT

பிரமாண்டமாக துவங்கியது.. புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநாடு !

03:18 PM Aug 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமுஎகச சார்பில் “கல்வி உரிமை பாதுகாப்பு மாநாடு”திருச்சியில் இன்று காலை 23.08.2019 ஆரம்பமானது.

ADVERTISEMENT


கல்வி மாநில பட்டியலில்தான் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள் . ‘ஒடுக்கும் கல்வியும் விடுதலைக் கல்வியும்’, ‘மறுக்கப்படும் சமூக நீதி’, ‘அரசியல் சட்டத்தை மறுக்கிறதா’, ‘குழந்தைகளின் மூளை வளர்ச்சித் திறன்’, ‘கலைகளும் கல்வியும்’, ‘சமூக உரையாடலாகக் கல்வி’, ‘பழங்குடியினரின் கல்வி உரிமை என்னவாகும்’, ‘மாணவர் கண்ணோட்டத்தை மறைக்கும் வரை வறிக்கை’, ‘பள்ளிக் கல்விக்கு நேரும் பாதகங்கள்’, ‘உயர்கல்வி இனி யாருக்கு’, சிறுபான்மை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள்’, ஆகிய தலைப்புகளில் கல்வியாளர்கள், மருத்துவர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.


மதியம் இயக்குநர் ரஞ்சித், எழுத்தாளர் கீதா உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்..

முனைவர் சந்திரகுரு எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை 2019 பின்னணியின் மர்மங்கள்’ என்ற நூலை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் க.கோவிந்தராஜ் வர்தனன் வெளியிட பனான லீப் ரெஸ்டாரண்ட் ஆர். மனோ கரன் பெற்றுக் கொள்கிறார். ‘மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன் தலைமையில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தொடக்கவுரையாற்றுகிறார்.

புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, கனி மொழி எம்.பி., திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துரை ரவிக்குமார் எம்.பி., வெ.ஈஸ்வ ரன் (மதிமுக), துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழகம்) உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர். மதுக்கூர் ராமலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். மேலும் கலை நிகழ்ச்சிகள், நாடகம், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த மாநாட்டில் புதிய கல்வியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள். ?

பாஜக அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை அமலானால் கல்வி முற்றிலுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும். 3 பல்கலைக்கழங்கள்தான் இருக்கும் என்றும், 30 குழந்தைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படும் உள்ளிட்ட பல்வேறு அபாயகரமான திட்டங் களை கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நாட்டில், 3ஆம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்கு மத்திய அரசுதான் கல்விக் கொள்கையை உருவாக்கும் என்றால் அது ஏழை, எளிய குழந்தை களின் கல்வியை பாதிக்கும். அமெ ரிக்காவில் தேசிய கல்விக் கொள்கை கிடையாது. அந்ததந்த மாநிலங்கள் தான் கல்விக் கொள்கையை தீர்மானிக்கின்றன.

பிரதமர் தலைமையில் ஏன் கல்விக் கொள்கை கொண்டு வர வேண்டும். கல்வியாளர்களே இல்லாத குழு எப்படி தரமான கல்விக் கொள்கையை உருவாக்க முடியும். மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி விட்டு 12 மொழிகளில் மட்டும் வெளியிட்டுள்ளன. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். அனை வருக்கும் சமமான கல்வியை மறுக்கப் படும். இனிமேல் கற்றுக் கொடுப்பது என்பது கிடையாது. கோச்சிங் சென்டர் மூலம்தான் பயில வேண்டும்.

இனி அரசு கட்டணத்தை நிர்ணயம் செய் யாது. அவரவர்கள் விருப்பத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனவும் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. எனவே முற்றிலுமாக கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த மாநாடும், இன்று மாலை பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT