ADVERTISEMENT

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்திற்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிஅஞ்சலி... சோகத்தில் மூழ்கிய கிராமம்! 

04:55 PM Aug 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை பகுதியில் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடைய துரைமுத்துவைப் பிடிக்க போலீசார் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். மேலும் ஒரு காவலர் இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியம் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


இந்நிலையில் சுப்பிரமணியத்தின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பண்டாரவிளையில் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க காவலர் சுப்பிரமணியனுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உட்பட காவல் துறை உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சுப்பிரமணியன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் பொதுமக்கள், உறவினர்கள் என அந்த கிராமமே கண்ணீருடன் அங்கு குழுமியது.

காவலர் சுப்பிரமணியன் மிகவும் நேர்மையானவர் என்றும், பணிக்குத் தவறாமல் வருபவர் என்றும் பகுதி மக்கள் தெரிவித்தனர். அதேபோல், குடும்ப நலம் பேணுவது, அக்கம்பக்கத்தில் உள்ள மக்களிடம் பழகுவதிலும் மிகவும் நல்ல அணுகுமுறை உடையவர் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர். இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட டி.ஜி.பி. திரிபாதி சுப்ரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT