ADVERTISEMENT

'ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டும்'- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

06:00 PM Sep 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சாலை விரிவாக்கத்திற்காக 1.78 லட்சம் மரங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை வெட்டியதாக ஆனந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (24/09/2020) விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவில்லை எனில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட வேண்டாம். சென்னை- மதுரை நெடுஞசாலையில் சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, நவம்பர் 5- ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT