ADVERTISEMENT

புதுவையில் நிபா அறிகுறியுடன் வந்தவருக்கு சிகிச்சை!

04:26 PM Jun 11, 2019 | kalaimohan

ADVERTISEMENT

நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

ADVERTISEMENT

கேரளத்தில் நிபா வைரஸ் கடந்தாண்டு வேகமாக பரவியது. இச்சூழலில் நடப்பாண்டும் மீண்டும் இவ்வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளத்தையொட்டி அமைந்துள்ள மாஹே பிராந்தியமுமுள்ளது. அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வருவதால் இங்கும் நிபா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக மாஹே எல்லையில் அங்கிருந்து வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்ய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கென புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குபோதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேர பணியில் இருப்பார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவிகப்பட்டுள்ள நிலையில் எர்ணாகுளத்திலிருந்து பூச்சேரிக்கு சுற்றுலா வந்த நபர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி காணப்பட்ட நிலையில் அவர் மாற்றும் அவருடன் வந்த மூன்று பேர் என மொத்தம் நால்வருக்கு தனி வார்ட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT