ADVERTISEMENT

நாளை தமிழகம் முழுவதும் முழுமுடக்கம்... சென்னையில் கட்டுப்பாடு தீவிரம்!!

08:26 PM Jul 18, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,807 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 47,179 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,403 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமா ஏற்கனவே ஜூலை மாதம் முடியும் வரை வரும் ஞாயிற்று கிழமைகள் மாநிலம் முழுவதும் முழுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் நாளை ஞாயிற்று கிழமை என்பதால் நாளை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகர காவல் காவல் எல்லையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்காக சென்னை மாநகர காவல் எல்லைகளில் 193 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்கள் அனுமதி என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வேறு வாகனங்கள் உத்தரவை மீறி வந்தால் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்படும். பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் தனிமனித இடைவெளியின்றி கூட்டமாக நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 3,588 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT