ADVERTISEMENT

வரத்து குறைவால் மீண்டும் எகிறிய தக்காளி விலை 

11:40 AM Jul 01, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில், “கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலையான ரூ. 60க்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்ததால் வெளிச் சந்தைகளில் விற்கப்படும் தக்காளியின் மொத்த விலை 50 முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து மீண்டும் குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 15 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 90 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT