ADVERTISEMENT

‘சுங்கக் கட்டணத்தை பாதியாகக் குறைக்கலாமே?’- பராமரிக்கப்படாத தேசிய நெடுஞ்சாலை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி!

05:51 PM Nov 28, 2019 | santhoshb@nakk…

மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை முறையாக அமைக்கும் வரை 50 சதவீத சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT


சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அது முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் கூறி, நவம்பர் 22- ஆம் தேதி நீதிபதி சத்தியநாரயணன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில், மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை மீண்டும் சாலை அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

ADVERTISEMENT


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, சாலை பராமரிப்பு தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலைத்துறை டிசம்பர் 9- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


மேலும், மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள சாலையை முறையாக அமைக்கும் வரை, 50 சதவீத சுங்கக் கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளும் மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT