ADVERTISEMENT

தமிழகத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்... மூன்று லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை!

07:07 PM Aug 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று தமிழகத்தில் 5,795 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,55,449 ஆக அதிகரித்துள்ளது. 53,155 பேர் கரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 1,186 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்த பாதிப்பு என்பது 1,20,267 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 67,720 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,384 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவிலிருந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தொட இருக்கிறது. 2,96,171 பேர் இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 116 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 81 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 35 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்தனர். தமிழகத்தில் 19 ஆவது நாளாக 100 -ஐ தாண்டி உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 6,123 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனா உயிரிழப்பு 2,517 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டில் 360, திருவள்ளூரில் 355 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை 329, காஞ்சிபுரம் 189, விருதுநகர் 162, கோவை 217, திண்டுக்கல்லில் 101, கன்னியாகுமரி 130 என உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,609 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கோவையில் 394, சேலம் 295, திருவள்ளூர் 393, செங்கல்பட்டு 315, நெல்லை 151, திருவாரூர் 120 என கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT