ADVERTISEMENT

தமிழகத்தில் 16 ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!! 

07:03 PM May 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 2,978 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 7,149 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,52,389 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 20,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 12,40,968 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 232பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 134 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 98 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,880 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 2,781 பேருக்கும், செங்கல்பட்டில் 2,181 பேருக்கும், மதுரையில் 1,024 பேருக்கும், திருவள்ளூரில் 1,008 பேருக்கும், திருச்சியில் 869 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 895 பேருக்கும், நெல்லையில் 862 பேருக்கும், தஞ்சையில் 831 பேருக்கும், தூத்துக்குடியில் 777 பேருக்கும், ஈரோட்டில் 771 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT