ADVERTISEMENT

குரூப்- 1 முறைகேடு தொடர்பான முழுமையான அறிக்கை!- மத்திய குற்றப்பிரிவுக்கு டிசம்பர் வரை அவகாசம்! 

07:22 PM Jan 30, 2020 | santhoshb@nakk…

குரூப்- 1 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய குற்றப் பிரிவுக்கு டிசம்பர் வரை அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

ADVERTISEMENT


2015-ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்- 1 விடைத்தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி திருநங்கை ஸ்வப்னா தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன் இன்று (30/01/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில், குரூப்- 1 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 74 விடைத்தாள்களை தடயவியல் கணினி ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டியிருப்பதாலும், மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் மத்திய குற்றப் பிரிவு தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்று, வழக்கை டிசம்பர் 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அப்போது, திருநங்கை ஸ்வப்னா தரப்பு வழக்கறிஞர், தேர்வில் தோல்வி அடைந்த 73 பேரையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்தால்தான், அப்போலோ பயிற்சி மையத்தில் படித்த 62 மாணவர்கள் மட்டும் எப்படி தேர்வாகினர் என்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என வாதிட்டார். இது தொடர்பாக, மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 5- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT