ADVERTISEMENT

மகளிர் உரிமைத்தொகை; புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

01:16 PM Sep 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள ரூ.1 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழ்நாடு அரசு மகளிரின் நல்வாழ்வுக்காக வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை, வங்கிகள் தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100 ஐ அழைத்து புகார் அளிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை குறித்து அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, விண்ணப்பிக்க முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களைக் கூறி பெண்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு கோடி பேருக்குதான் ரூ. 1000 வழங்கப்படும் என எவ்வித இலக்குகளும் இல்லை. உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்க தவறியவர்கள் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அக்.18 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT