ADVERTISEMENT

சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

01:06 PM Feb 17, 2020 | santhoshb@nakk…

2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (17/02/2020) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் பட்ஜெட் உரை மீதான காரசார விவாதம் நடைபெற்றது.

ADVERTISEMENT


வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் தொடர்பாக முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தீர்மானம் குறித்து விவாதம் நடத்தாமலேயே அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

ADVERTISEMENT

ஆய்வில் இருப்பதாக கூறி வந்த சபாநாயகர் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்கிறார். போராட்டம் பற்றி காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியது பற்றி முதல்வர் தெரிவிக்கவில்லை" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராமசாமி, சென்ற கூட்டத்தொடரிலேயே கொடுத்த தீர்மானம் பற்றி எந்த தகவலையும் சபாநாயகர் தெரிவிக்கவில்லை. தீர்மானத்தை ஏற்றுக்கொண்டோம் அல்லது நிராகரித்துவிட்டோம் என கடிதம் தர வேண்டும்.

தீர்மானம் குறித்து எதையும் தெரிவிக்காமல் திடீரென நிராகரித்துவிட்டதாக கூறுகிறார் சபாநாயகர். வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியது யார்? எந்த அதிகாரி காரணம்? என்பது பற்றி கேள்வி எழுப்பினோம். எங்களது கேள்விகள் பற்றி முதல்வர் எந்த விளக்கமும் தரவில்லை" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT