2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் இதுவாகும். மேலும் 15 ஆவது சட்டப்பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

TN ASSEMBLY CM PALANISAMY SPEECH CAA VANNARAPETTAI POLICE

இரண்டாவது நாளான இன்று (17/02/2020) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு பேரவையில் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் சாவித்திரி அம்மாள், ராஜேந்திர பிரசாத், ராஜசேகரன் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்த தூண்டி விட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

Advertisment

TN ASSEMBLY CM PALANISAMY SPEECH CAA VANNARAPETTAI POLICE

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, "வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்ற போது ஒத்துழைக்க மறுத்து காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர். காவலர்கள் மீது செருப்பு, கற்கள், பாட்டில்கள் வீசப்பட்டது. இதுவரை 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நோயால் இறந்ததை போலீஸ் தடியடியால் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர். சில சக்திகளும், விஷமிகளும் போராட்டத்தைத் தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளன. இஸ்லாமியர்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும் என்று முதல்வர் உறுதி அளித்தார்."

இதனிடையேமுதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.