ADVERTISEMENT

"தீக்குளித்து இறந்த கண்ணையா குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு"- சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்! 

03:06 PM May 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் ஆக்கிரமிப்பு பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனத்தின் ஒருவர் தொடுத்த வழக்கில் மயிலாப்பூர் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள 259 வீடுகளையும் 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அதன்படி வீடுகளை இடிக்கும் பணி கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் மீண்டும் வந்த போது, கண்ணையா என்ற முதியவர் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, வீடுகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கண்ணையா குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உரிய இடத்தில் உரிய மரியாதையுடன் ஆர்.ஏ.புரம் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT