ADVERTISEMENT

திருவள்ளூர் கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பின்னணி என்ன?

12:33 PM Sep 14, 2019 | rajavel

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT




ஆந்திராவைச் சேர்நதவர் சீனிவாசராவ். சவுடு அள்ளுவதாக கூறி பர்மிட் வாங்கிவிட்டு, சிலர் மணல் அள்ளுகின்றனர். அவர்களை இவர் உள்ளே விடுவதில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கனிமவளத்துறை அதிகாரி ஒருவர்தான், அமைச்சர்களுக்கும் புரோக்கர்களுக்கும் பணம் வாங்கித்தரும் மீடியேட்டர். மீடியேட்டராக செயல்படும் இவருக்கு, சீனிவாசராவ் திருவள்ளூரில் இருப்பது தொந்தரவாக இருந்துள்ளார். இதனால் கடுப்பான அந்த அதிகாரி, மணல் கடத்தும் கும்பலை வைத்து பெட்டிசன் கொடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையை வரவழைத்துள்ளார். இதனால்தான் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த சோதனை கனிமவளத்துறை அதிகாரிகளிடையே பெரும் புகைச்சலாக உள்ளது.

-மகேஷ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT