ADVERTISEMENT

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

05:27 PM Aug 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து பழைய வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களுக்கு பாசனத்திற்காக 26/08/2020 முதல் 24/12/2020 முடிய 120 நாட்களுக்கு 324 மி.க. அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT