ADVERTISEMENT

தேர்தல் நாளோடுநின்ற மும்முனை மின்சாரம்... வேதனையில் டெல்டா விவசாயிகள்!!  

11:50 AM Apr 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தலுக்குப் பிறகு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் சம்பா சாகுபடி, குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து 24 மணி நேரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பை நம்பி, கோடை சாகுபடி மற்றும் முற்பட்ட குறுவை சாகுபடி தற்போது 40 ஆயிரம் ஏக்கர் அளவில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் சாகுபடிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த 7ஆம் தேதி வரை தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைத்து வந்தது. இந்நிலையில் மும்முனை மின்சாரம் என்பது கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவே வருகிறது.

தற்பொழுது 12 மணி நேரம் கூட முழுமையாக மின்சாரம் இல்லாததால் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல் பெரம்பலூரில் விவசாய பயன்பாட்டிற்காக 45 ஆயிரம் மின் மோட்டார்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கிணற்று நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் உள்ளனர். மின்மோட்டார் பயன்பாடுகள் மிக அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு மூன்று ஷிப்ட்களாக பிரித்து மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நடைமுறைக்கு வந்த அன்று ஒரு நாள் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதாக கூறும் விவசாயிகள், அதன் பிறகு வோல்டேஜ் குறைவாக வருவதாகவும், மின் மோட்டாரை இயக்க முடியவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மின் மோட்டார்களை இயக்க சுமார் 445 வோல்டேஜ் மின்சாரம் தேவை என்ற நிலை இருக்கும் பொழுது, 350 வோல்டேஜ் மட்டுமே மின்சாரம் வருவதால் முழுமையாக மோட்டார்களை இயக்கி நீரை பெற்று விவசாயம் செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர் விவசாயிகள். நேற்றுதான் உர விலையேற்றம் தொடர்பான செய்திகள் வெளியாகி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில் அறிவிக்கப்பட்ட மும்முனை மின்சாரமும் வயல்தேடி வராதது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்பத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT