ADVERTISEMENT

"ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு...விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினி அழைக்கப்பட வாய்ப்பு"- விசாரணை ஆணைய வழக்கறிஞர் தகவல்!

09:33 AM Dec 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கடந்த 2018- ஆம் ஆண்டு மே 22- ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த மக்கள் பேரணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதுவரையிலும் 23 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டதில் 586 பேர்கள் ஆஜராகியுள்ளனர். 775 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்தவர்களைச் சந்தித்த போது தனது கருத்தைத் தெரிவித்ததால் அவரும் சாட்சியாகச் சேர்க்கப்பட்டு கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதி அவர் நேரில் ஆஜராவதற்கு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.

அது சமயம் ரஜினி தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாக அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் 24- ஆம் கட்ட விசாரணை ஜனவரி மாதம் நடக்கவிருக்கிற நிலையில், நேற்று (11/12/2020) ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் என்ற சேகர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தவர், 24- ஆம் கட்ட விசாரணை வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. அது சமயம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி மீண்டும் விசாரணைக்காக ஒரு நபர் ஆணையத்திற்கு அழைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT