vikram to play villan role in thalaivar 170 movie

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது. அண்மையில் இப்படத்தின் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தைத்தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாகவும் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு இதனை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.