ADVERTISEMENT

சாத்தான்குளம் வழக்கில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

04:37 PM Sep 26, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கு எதிராக சி.பி.ஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். அதில், '9 போலீசார் மீதும் கொலை, கூட்டுச்சதி உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்ரவதைச் செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 22, 23- ஆம் தேதிகளில் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது' எனக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உயிரிழந்த நிலையில் கைதான 9 போலீசாருக்கு எதிராக சி.பி.ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT