ADVERTISEMENT

18 தொகுதிகளில் மட்டுமே இடைத் தேர்தல் நடத்துவதன் சூட்சுமம் இதுதான்..!"

08:42 AM Mar 11, 2019 | nagendran

ADVERTISEMENT

2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 136 தொகுதிகளிலும், திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி 98 இடங்களிலும் வென்றது. ஜெயலலிதா காலமானதால், ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதனால், அதிமுகவின் பலம் 135-ஆக குறைந்தது. பின்னர் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ் மறைவு, ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிப்பு காரணமாக அதிமுகவின் பலம் 115-ஆக குறைந்தது.

ADVERTISEMENT

அதேபோல், திருவாரூரில் வென்ற கலைஞர் மறைந்ததால், திமுக கூட்டணியின் பலம் 97 ஆக குறைந்துவிட்டது. ஆர்.கே. நகரில் வென்ற டிடிவி தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ ஆவார். எனவே தற்போதைய நிலவரம் அதிமுக-115 (சபாநாயகரையும் சேர்த்து), திமுக-97, சுயே-01 காலியிடம் -21

இங்கே தான் இருக்கிறது எடப்பாடியின் சூட்சுமம். தற்போதே ஆளுங்கட்சி மெஜாரிட்டி இன்றி இருக்கிறது. அதாவது 118 இருந்தால் மட்டுமே மெஜாரிட்டி, அதற்கே 3 உறுப்பினர்கள் குறைவாக இருக்கிறது. (எண்ணிக்கை முரண்படும்போது சபாநாயகர் வாக்களிக்கலாம்)

ஒருவேளை இடைத் தேர்தல் 21 தொகுதிகளில் நடத்தப்பட்டு, 21 தொகுதியிலும் திமுக வென்றால், அதன் பலம் 97+21 = 118 ஆகி மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை பிடித்துவிடும். அதனால் தான் வழக்குகளை காரணம் காட்டி, தொகுதிகளின் எண்ணிக்கையை மிக நுட்பமாக குறைத்திருக்கிறார்கள். அதாவது, இப்போதைய நிலவரப்படி, 18 தொகுதிகளிலும் திமுக வென்றால், அதன் பலம் 115-ஆகத் தான் இருக்கும். மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது.

தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் குறைந்த பட்சம் 4 தொகுதிகளில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றால் கூட, ஆட்சிக்கு சிக்கல் இல்லை. இதை எல்லாம் ஆராய்ந்து தான், தேர்தல் நடத்தவே சம்மதித்திருக்கிறது ஆளுங்கட்சி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT