Skip to main content

20 ரூபாய் நோட்டுடன் டிடிவி.தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
Women's  Siege office of TTV Dinakaran with a 20-rupee note!

 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவான  டிடிவி தினகரன் தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என நேற்று இரவு அப்பகுதி பெண்கள் 20 ரூபாய் நோட்டுடன் தினகரன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

 

Women's  Siege office of TTV Dinakaran with a 20-rupee note!

 

சென்னை தண்டையார் பேட்டை இரட்டைக்குழி தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 20 ரூபாயுடன் முற்றுகையிட்ட பெண்கள், டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக இருக்க தகுதியே இல்லாதவர். தொகுதிப்பக்கமே அவர் வருவதில்லை, சாக்கடை நிரம்பி வழிகிறது இதனால் பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது, எல்லா மருத்துவமனையிலும் போய் பாருங்கள் ஆர்கே நகர் குழந்தைகள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர் என்று, என கூறி ஆர்பாட்டம் நடத்திய பெண்கள் 20 ரூபாய் நோட்டுகளை அலுவலகத்தில் வீசி விட்டு இனி அந்த கட்சி இந்த கட்சி என இல்லாமல், பணத்திற்காக வாக்களிக்காமல் எங்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என கூறினர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார். 

Next Story

'தேனி மக்கள்தான் முடிவு செய்வார்கள்'-பட்டியலை வெளியிட்ட டி.டி.வி.தினகரன்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'The people will decide' - TTV Dinakaran published the list

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து நாம் தமிழர், பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் நிலையில் தேனியில் டி.டி.வி. தினகரன், திருச்சியில் செந்தில்நாதன்  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்து பட்டியலை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''தேனியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தேனி மக்கள்தான் முடிவு செய்வார்கள். அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான். அங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் என்னுடைய முன்னாள் நண்பர்தான். கடுமையான பண வீக்கத்திலும் சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கியுள்ளார் மோடி. பிரதமராக மீண்டும் மோடி வரப் போகிறார் என்பது தெரிந்து விட்டது' என தெரிவித்தார்.