ADVERTISEMENT

சொத்துக்களை பிரித்துக்கொடுத்ததும் தந்தையை பிச்சை எடுக்கவைத்த பிள்ளைகள்;சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் மனு

11:47 PM May 06, 2019 | selvakumar

ADVERTISEMENT

பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பார்கள். அது ஒரு பெரியவரின் வாழ்க்கையில் உண்மையாவிட்டது. தனது சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்ததும் பிள்ளைகள் அவரை அடித்துவிரட்டி பிச்சை எடுக்க வைத்துவிட்டதாகவும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளார் அந்த பெரியவர்.

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் என்ற கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய பெரியவர் கோவிந்தராஜ். அவரது மனைவி மேகலா. இவர்களுக்கு உதயகுமார், மணிகண்டன் ரமேஷ் என மூன்று மகன்கள் உள்ளனர்.

கோவிந்தராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான எட்டு ஏக்கர் விவசாய நிலங்களை சமமாக தனது மூன்று மகன்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். சொத்துக்களை பிரித்து கொடுத்த சில நாட்களில் மூன்று மகன்களும் தந்தை கோவிந்தராஜனை வீட்டை விட்டு அடித்து விரட்டி அடித்துள்ளனர்.

வயிற்றுப்பிழைப்புக்கா பல இடங்களில் பிச்சைகேட்டு காலத்தை கடத்தியவர் இன்று தனக்கு நீதி வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் ," எனது சொத்தை பிரித்து கொடுத்ததும், சில நாட்களில் என்னை வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர். பின்பு வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கடந்த மூன்று வருடங்களாக பிச்சை எடுத்தே உயிர்வாழகிறேன்.

வெயிலில் உடம்பு ஒத்துழைக்காமல் போனதும் மகன்களிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டேன். அவர்கள் தன்னை, அடித்து விரட்டிவிட்டனர். உடனே எனது மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க நன்னிலம் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பிறகே இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனது சொத்துக்களை மீட்டு தரக்கோரி மனு கொடுத்துள்ளேன்." என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT