ADVERTISEMENT

தாய் - தந்தை கண் முன்னே சிறுவனை உயிரோடு உள்ளிழுத்து பலி வாங்கிய மணல்

08:43 PM May 06, 2019 | raja@nakkheeran.in

ADVERTISEMENT


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வழியாக செல்லும் கமண்டல நாகநதியில் மணல் திருட்டு என்பது சர்வசாதாரணம். ஆளும்கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக, இயற்கை வளகொள்ளைக்கு எதிராக பேசும் பாமக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இதில் மறைமுகமாக மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

ADVERTISEMENT

இவர்கள் மீது காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை என எந்த துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இந்த ஆற்றை ஒட்டியுள்ள விவசாய கூலி மக்களும் ஆற்று மணலை அள்ளி ஜலித்து விற்பனை செய்கின்றனர். அப்படி விற்பனை செய்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகனை இழந்து கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.


ஆரணி முனியன்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன், இவரது மனைவி அபிராமி. இந்த தம்பதியரின் மகன் 15 வயதான வெற்றிவேல். அருகில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறான். கோடை விடுமுறை என்பதால் வீட்டில் உள்ளான். பார்த்திபன் –அபிராமி தம்பதியினர், ஆற்று மணலை அள்ளி அதனை ஜலித்து ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். மே 6ந்தேதி காலை மணல் அள்ளிக்கொண்டுயிருந்தனர் இந்த குடும்பத்தினர். கோடை விடுமுறை என்பதால் மகனையும் அழைத்து சென்று மணல் அள்ளிபோடச்சொல்லியுள்ளனர்.


அப்போது, மணல் அள்ளிய இடத்தில் குட்டைப்போல் நீர் தேங்கியிருந்துள்ளது. அங்கு மணல் அள்ள இறங்கியுள்ளான் சிறுவன் வெற்றிவேல். புதைக்குழி போல் அந்த சிறுவனை அது உள்ளே இழுத்துக்கொண்டுள்ளது. மேலேயிருந்த மணல் அவன் மீது சரிந்து முழுவதும் மூடியுள்ளது.


இதனைப்பார்த்து அந்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதுக்கொண்டு மணலை வாரி தூரப்போட்டு மகனை காப்பாற்ற முயன்றனர். இதனைப்பார்த்து மணல் அள்ளிக்கொண்டு வண்டிக்காரர்களும் ஓடிவந்து மணலை வாரி எறிந்துவிட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அதற்கு நீண்ட நேரமானது. ஒருவழியாக அந்த சிறுவனின் தலை முடி சிக்க அதனை பிடித்து இழுத்துள்ளனர். வெளியே இழுத்து அவனை தரையில் போட்டு மூச்சு விட வைக்க முயற்சி செய்துள்ளனர். அது முடியாமல் போனது.


வாயில் மணல், மூச்சு விட முடியாதது போன்றவற்றால் உள்ளேயே இறந்துள்ளான். தங்கள் கண் முண்ணால் உயிரோடு தங்கள் பிள்ளை மணலில் புதைந்து உயிர் விட்டதை பார்த்து அவனது பெற்றோர் அதிர்ச்சியாகி அழுத அழுகை அந்த பகுதி மக்களை கண்ணீர்விட வைத்தது.


இதுப்பற்றி ஆரணி கிராமிய காவல்நிலையத்துக்கு தகவல் கூறியதன் அடிப்படையில் போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்த அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT