ADVERTISEMENT

திருவள்ளுவர் தின கொண்டாட்டம்... மாமல்லபுரத்தில் உருவாகும்  பிரமாண்ட மணல் சிற்பம்!

01:47 PM Jan 13, 2020 | kalaimohan

ADVERTISEMENT

புகழ் பெற்ற உலகச் சுற்றுலா தளமும், புகழ் வாய்ந்த பல்லவ பேரரசின் துறைமுகப் பட்டினமான மாமல்லபுர கடற்கரை மணற் பரப்பில், வான் புகழ் அய்யன் திருவள்ளுவரின் 2051 பிறந்தநாளை முன்னிட்டு 70 அடி மணற் சிற்பம், மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செயலாளர் இந்தியாவின் தலைசிறந்த சிற்பி பாஸ்கர், சிற்பி முருகன் மற்றும் கட்டிட கலைக் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது.

இந்த மணற் சிற்பம் 16/01/2020 வியாழக்கிழமை அன்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு சான்றோர் பெருமக்களால் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டவுள்ளது என மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

மேலும் அன்றைய தினம் தமிழ்ச் சங்கம் சார்பில் பல பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கிராமபுறத்தில் இருந்து சென்னையில் பணிக்காக குடியேறியவர்கள் எல்லாம் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிடும் நேரத்தில் சென்னை வாசிகளுக்கு இது ஓர் அருமையான காட்சியாக விளங்கும். மேலும் பல்லவர்களின் சிற்பங்களும், கடற்கோயில்களும், ஆங்கிலேயர் காலத்து கலங்கரை விளக்கமும் மல்லை கடற்கரையோரம் தென்றல் காற்றையும் ரசிக்க வருமாறு மல்லை தமிழ்ச் சங்கம் அன்புடன் வரவேற்கிது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT